‘மாகியை மீண்டும் கொண்டு வருவோம்’ - நெஸ்லே இந்தியா தலைவர்

‘மாகியை மீண்டும் கொண்டு வருவோம்’ - நெஸ்லே இந்தியா தலைவர்
Updated on
1 min read

மாகி நூடுல்ஸை மீண்டும் இந்திய சந்தையில் கொண்டு வருவதே எங்களின் முக்கியமான இலக்கு என்று நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

ஐந்து நாட்களுக்கு முன்பு புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது.

பல திட்டங்களை வைத்திருக் கிறோம். அதில் மிக முக்கியமானது மாகியை மீண்டும் கொண்டுவரு வதான் பிரதான திட்டமாகும். அதில் தான் நாங்கள் கவனமாக இருக்கி றோம். எங்கள் நிறுவனம் இந்தியா வுடன் இணைந்திருக்கிறது. நாங்கள் 100 வருடங்களுக்கு மேலாக இங்கு இருக்கிறோம். இந்த நாட்டு சட்டத்தை மதித்து செயல்பட்டு வருகிறோம். அனைத்து அனுமதி யையும் பெற்று மீண்டும் மாகியை கொண்டு வருவோம். எவ்வளவு காலத்துக்குள் இதை கொண்டு வரமுடியும் என்று தெரியவில்லை. விவகாரம் நீதிமன்றத்தில் இருப்ப தால் அதைப்பற்றி இப்போது கூறமுடியாது.

இந்த விவகாரம் எங்களுக்கு ஒரு படிப்பினை ஆகும். இதுபோல எதிர்காலத்தில் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். மாகி நூடுல்ஸ் தடையால் மாகி என்னும் பெயரில் விற்கப்படும் அனைத்து பொருட்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய எங்களது பிராண்டுகளை மக்களிடையே கொண்டு செல்வதற்கு அதிக செலவு செய்யப்படும் என்று கூறினார்.

நெஸ்லே நிறுவனம் ஜுன் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள் ளது. 64.40 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 287 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in