Published : 23 Feb 2020 09:06 AM
Last Updated : 23 Feb 2020 09:06 AM

இந்திய பொருளாதாரம் வளர சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அவசியம்: சர்வதேச ஆலோசனை நிறுவனம் ‘டிலாய்ட்’ தகவல்

இந்தியாவில் சில்லரை வர்த்தகத் தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச ஆலோசனை நிறுவன மான டிலாய்ட் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு பிராண்டுகள் இந் தியாவுக்குள் வரும்போது நுகர்வு அதிகரிக்கும். இதனால் பொரு ளாதாரம் வளரும். அதற்கு அந்நிய நேரடி முதலீடுகளை சில்லரை வணிகத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கேற்ப விதிமுறைகளில் மாற் றங்களைக் கொண்டு வருவது அவசியம் என்றும் சுட்டிக் காட்டி உள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டுடன் இணைந்த சில்லரை வர்த்தக மானது நுகர்வை அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏறக்குறைய பெருநகரங்களில் உள்ள 70 சதவீத மளிகைக் கடைகள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள 37 சதவீத கடைகளுக்கு புதிய தொழில்நுட்பம் கிடைக்கும். இதன் மூலம் பன்னாட்டு பொருள் கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அவர்களது வணிக மும் பெருகும் என்று குறிப் பிட்டுள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு 2018-ம் ஆண்டில் 22.40 கோடி டாலராக இருந்தது 2019-ம் ஆண்டில் 98 சதவீத அளவுக்கு அதிகரித்து 44.30 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

உலகிலேயே மூன்றாவது பெரிய நுகர்வு மக்கள் தொகை யைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால் அதிக முத லீடுகளை ஈர்க்கும் துறையாகவும் திகழ்கிறது. அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகை யில் அரசின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். நவீன வர்த்தகப் போக்கையும், பாரம்பரிய வணிகத்தையும் இணைப்பதன் மூலம் இது பலரை யும் சென்று சேரும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை வாய்ப்பை உருவாக்கித் தரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பிராண்டுகள் இந்தியா வுக்கு வருவதன் மூலம் முதலீடு களும், அதுசார்ந்த தொழில் நுட்பங்களும் இந்தியாவுக்குள் வரும். உள்ளூர் சந்தையைச் சென்றடைவதற்கான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஸ்திரமான சில்லரை வணிகத்துக்கு வழிவகுக்கும். இது வளரும் பொருளாதார நாடான இந்தியாவுக்கு மிகப் பெரும் வலுசேர்க்கும் என்று டிலாய்ட் குறிப்பிட்டுள்ளது. உலகில் தொழில் தொடங்க எளிமையான விதிமுறைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 130-வது இடத்திலிருந்து 63-வது இடத் துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து 10 புள்ளிகள் எடுத்தால் மட்டுமே முன்னேற முடியும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையையும் இந்தியா பெறும். அந்நிய முதலீடுகளும் தொடர்ந்து வரத் தொடங்கும். அதற்கான அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் இந்தியாவில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூல மான வர்த்தகம் 30 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவன அறிக்கை, ஸ்மார்ட்போன் உப யோகம் அதிகரித்துவரும் சூழ லில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப் பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x