Published : 23 Feb 2020 08:19 AM
Last Updated : 23 Feb 2020 08:19 AM

தொழில் சார்பு கொள்கைகளை நோக்கி இந்தியா வேகமாக நகர வேண்டும்: தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் கருத்து

மும்பை

இந்தியா பொருளாதார மேம் பாட்டை அடைய வேண்டுமென் றால் முதலாளிகள் சார்புடைய கொள்கை முடிவுகளை கைவிட்டு, முற்றிலும் தொழில் சார்ந்த கொள்கை முடிவுகளை நோக்கி நகர வேண்டும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொழில் சார்ந்த கொள்கை முடிவே சரியான பொருளாதார நடைமுறையாக இருக்கும். அதுவே 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை சாத்தியப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று ஐஐடி கான்பூரில் முன் னாள் மாணவர்கள் சந்திப்பு நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கல்லூரியின் முன்னாள் மாண வரான கே. சுப்ரமணியன் பேசிய தாவது: “இந்தியா இன்னும் முற்றிலு மாக முதலாளிகள் சார்புடைய கொள்கைகளிலிருந்து வெளிவர வில்லை. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில் சார்பு டைய கொள்கைகளே அவசியம். இந்தியா அதை நோக்கி நகர வேண் டும். முதலாளிகள் சார்புடைய கொள்கைகள் சரியான தொழில் முறை அல்ல. எனவே வளர்ச் சியை நோக்கிப் பயணிக்க அதற் கேற்ற கொள்கைகளை உரு வாக்க வேண்டும். அந்த விதத்தில் நிறுவனங்களிடையே போட்டிச் சூழலை ஏற்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கைகளை பரிசீலிக்க வேண் டும். தொழில் சார்புடைய கொள்கை கள் அவற்றை சாத்தியப் படுத்தும்” என்றார்.

சுதந்திரத்துக்குப்ப் பிறகு உரு வாக்கப்பட்ட பொருளாதாரக் கொள் கைகளை விமர்சிக்கும் விதமாகவே அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, “நாம் பொருளாதார கொள்கை களை வகுப்பதற்கு தற்காலத்திய அணுகுமுறைகளை மட்டும் கவனத் தில் கொள்கிறோம். பண்டைய காலத்து முறைகளை புறக்கணிக் கிறோம். அதுசரியானது அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழு தப்பட்ட நூல்களும் பல முக்கிய மான பார்வைகளை வழங்குகின் றன. அவற்றிலும் நாம் உரிய கவ னம் செலுத்த வேண்டும். வளம் உருவாக்கத்தில் ‘அர்த்தசாஸ்திரா’ பல அற மதிப்பீடுகளை வலியுறுத்து கிறது. நாமும் சந்தையில் நம்பிக்கையை உருவாக்க வேண் டும்” என்று அவர் கூறினார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்ட ‘அசெம்பிள் இன் இந்தியா’ பற்றி அவர் கூறுகையில், “ அசெம்பிள் இன் இந்தியா திட்டத்தை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவ்வாறு இல்லை. ‘அசெம்பிள் இன் இந்தியா’ ஒரு கூடுதல் திட்டம். மற்ற இலக்குகளை அடைய இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். வாகன துறையில் ஆரம்பகட்டமாக அசெம்பிள் பணி களே இந்தியாவில் மேற்கொள்ளப் பட்டன. அதன் பிறகே உற்பத்தி ஆலைகள் வரத் தொடங்கின. அறிவுசார் சொத்துரிமைகள் உருவாகின. அசெம்பிள் இன் இந்தியா மூலம் நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய 4 கோடி வேலை வாய்ப்புகள் 2025-ல் உருவாகும். 2030-க்குள் 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x