Published : 22 Feb 2020 09:26 AM
Last Updated : 22 Feb 2020 09:26 AM

மக்களிடம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அதிகரிப்பு; இயற்கை உணவு உற்பத்தியில் இந்தியாவுக்கு முதலிடம்: ஆண்டுக்கு 17 சதவீதம் வளர்ச்சி

இந்திய இயற்கை உணவு சந்தை ஆண்டுக்கு 17 சதவீதம் அளவில் வளர்ச்சி கண்டுவருகிறது என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். மக்களிடம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிற நிலையில் இயற்கை உணவுக் கான தேவை அதிகரித்து, அதற் கான சந்தை மிக வேகமாக வளரும் என்று அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இயற்கை உணவு உற்பத்தியில் முதலிடத்தை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று டெல்லியில் இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது. அதில் மத்திய உணவு பதப்படுத்து தல் துறையின் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இருவரும் இணைந்து விழாவை தொடங்கிவைத்தனர்.

3 நாட்களுக்குத் திருவிழா

பிப். 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இயற்கை உணவுத் திருவிழாவில் 180-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள், சுய தொழில் குழுவினர், கூட்டுறவு சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.

அப்போது பேசிய ஹர்சிம்ரத் கவுர், ‘‘உலகம் தற்போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இயற்கை உணவுக்கான தேவை அதிகரித்துள்ளது. இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவு களுக்கான முக்கிய சந்தை இந்தியாவிடமே உள்ளது. இந்தியா வின் பல பகுதிகள் இயற்கையோடு இயைந்தவை. இயற்கை உணவு துறை ஆண்டுக்கு 17 சதவீதம் அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

வரும் ஆண்டுகளில் அது மேலும் அதிகரிக்கும். இத்துறை யில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இயற்கை உணவுக்கான வடிக்கையாளர்களை, சில்லறை வியாபாரிகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பை இத்தகைய திருவிழாக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. இத்துறையே விவசாயிகளுக்கான ஊதியத்தை இருமடங்காக உயர்த்துவதற்கான மத்திய அரசின் இலக்குக்கு அடிப்படையானது’’ என்று அவர் தெரிவித்தார்.

515 மில்லியன் டாலர் ஏற்றுமதி

இந்தியா 2017-18-ம் நிதி ஆண்டில் 1.7 மில்லியன் டன் அளவில் சான்றளிக்கப்பட்ட இயற்கை உணவுகளை உற்பத்தி செய்துள்ளது. 515 மில்லியன் டாலர் அளவில் அவற்றை ஏற்றுமதி செய்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய இயற்கை உணவு சந்தை மதிப்பு ரூ.75,000 கோடியை எட்டும் என்று சில வாரங்களுக்கு அவர் முன் தெரிவித்திருந்தார்.

பழங்குடிகளின் தயாரிப்புகள்..

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசுகையில், ‘‘இயற்கை உணவுத் துறையில் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. பெண் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் தொடங்கும் வகையில் மத்திய அரசு முத்ரா கடன் வழங்குகிறது.

உணவு பதப்படுத்துதல் தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் பெண்களுக்கு கிடைக்கபெறச் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இத் திருவிழாவில் மாற்றுத் திறனாளி களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். பழங்குடிகளின் தயாரிப்பை இதில் இணைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இயற்கை உணவு உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக உணவு பதப்படுத்துதல் துறை செயலர் புஷ்பா சுப்ரமணியம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x