Published : 22 Feb 2020 09:17 AM
Last Updated : 22 Feb 2020 09:17 AM

இந்திய ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் அமெரிக்க ஊழியர்கள்

கோப்புப்படம்

பெங்களூரு

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் அமெரிக்க ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட் சத்தை தாண்டியுள்ளது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய 4 நிறுவனங்களில் மட்டும் 55,000-க்கும் மேல் அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர்.

காக்னிசன்ட் நிறுவனத்தில் மட் டும் 46,400 அமெரிக்கர்கள் பணி புரிகின்றனர். காக்னிசன்ட் அமெரிக் காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும், இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால் அந்நிறுவன மும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.

இந்தியாவை தலைமையிட மாகக் கொண்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனங்கள் இந்தியர்களை அமெரிக்காவில் உள்ள அதன் கிளைகளில் பணிக்கு அமர்த்தி வந்தது. அமெரிக்கா விசாவுக்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலைகளில் அந்நாட்டு ஊழியர் களைக் கொண்டே அங்குள்ள பணி களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்கா வில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டும் 1 லட்சம் அளவில் அமெ ரிக்கர்கள் பணிபுரிகின்றனர்.

மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (நாஸ்காம்) இது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள் ளது. அதன்படி, டிசிஎஸ் நிறுவனத் தில் 20,000 அமெரிக்க ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 14,000, ஹெச்சிஎல் நிறுவனத்தில் 13,400 மற்றும் விப்ரோ நிறுவனத்தில் 10,000 அளவிலும் அமெரிக்கர்கள் பணியில் அமர்த் தப்பட்டுள்ளனர்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் 2017-ம் ஆண்டில் அதன் அமெரிக்க கிளைகளில் மட்டும் 10,000 அளவில் அமெரிக்கர்களை பணியில் அமர்த்த முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது அது 14,000 -ஆக உயர்ந்துள்ளது.

இதனால் ஒப்பந்தங்கள் மூலம் ஊழியர்களை பணிக்கு அமர்த்து வதற்கான செலவு குறைந்துள்ளது. மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்கள் தேவைக்கு ஒப்பந்த முறையை பெரிதளவில் சார்ந்து இருந்தன. இதனால் அந்நிறு வனங்களின் செலவு உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேரடி யாகவே அமெரிக்க ஊழியர் களை பணிக்கு அமர்த்துவதால் ஒப்பந்த முறைக்கான செலவினம் குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x