

சென்னையில் தங்கம் விலை இன்று மாலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த 3 மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இருப்பினும் பின்னர் சற்று நிலைமை சீரடைந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் சீன மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் சுழற்சியும் தேக்கமடைந்துள்ளது.
இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32096 -க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 34ரூபாய் உயர்ந்து ரூ.4012-க்கு விற்கப்பட்டது.
பின்னர் மாலையிலும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை மேலும் 39 ரூபாய் அதிகரித்து ரூ.4051 ரூபாயாக விற்பனையாகிறது.
இதன் மூலம் இன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் 73 ரூபாய் அதிகரித்து ரூ.4051 ரூபாயாக விற்பனையாகிறது.
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32408 -க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் ரூ. 34016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து ரூ. 52.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.