

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 32 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது.
சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை, பங்குச்சந்தை ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32096 -க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 34ரூபாய் உயர்ந்து ரூ.4012-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் 33704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து 52.30ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.