Published : 21 Feb 2020 08:18 AM
Last Updated : 21 Feb 2020 08:18 AM

பிற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவாக வேண்டும்: ஃபிக்கி பொதுச் செயலர் கருத்து

சீனாவில் கோவிட் 19 வைரஸ் பரவிவரும் தற்போதைய சூழலில், பிற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை இந்தியா உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப் பின் (ஃபிக்கி) பொதுச் செயலர் திலீப் செனாய் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இந்திய உற்பத்தி யாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். அதன் மூலம் இந் தியாவில் உற்பத்தியைப் பெருக்கி, பிற நாடுகளுக்கு விநியோகம் செய்யும் வாய்ப்புகளை உரு வாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது சீனாவில் கோவிட் 19 வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக சீனா வின் பொருளாதாரமும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. சீனா பல்வேறு நாடுகளுக்குப் பொருட்களை ஏற்று மதி செய்துவருகிறது. தற்போது கோவிட் 19 வைரஸ் தாக்குதலால் அங்கு உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் பிற நாடுகளுக்கான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவை நம்பியிருக்கும் பிற நாடுகளும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் அந்நாடுகளுக்கான பொருட்களை விநியோகம் செய்யும் வகை யில் இந்தியா தன்னை உருவாக் கிக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய மருந்து தயாரிப்பு மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பெருமள வில் சீனாவையே நம்பியுள்ளன. சீனாவில் கோவிட் 19 வைரஸ் பரவத் தொடங்கியதும், அப்பகுதி யில் உள்ள மருந்துத் தயாரிப்புகள் ஆலைகள் மூடப்பட்டன. அங் கிருந்துதான் இந்தியா மருந்துத் தயாரிப்புக்கான மூலப் பொருட் களை வாங்கிவருகிறது. இந்நிலை யில் மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மருந்து விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவின் மருந்துப் பொருட்கள் தேவையில் 68 சதவீதம் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப் படுகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் சீனாவிலிருந்து 2.4 பில்லியன் டாலர் அளவில் மருந்துப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

சலுகைகள் வழங்க வேண்டும்

அதேபோல், மின்னணு சாதனங் கள் உற்பத்தி நிறுவனங்களும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. டிவி பேனல், எல்இடி, குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் ஆகிய பாகங்களுக்கு இந்திய மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் சீனாவை பெருமளவில் நம்பியுள் ளன. தற்போது சீனாவிலிருந்து விநியோகம் தடைபட்டுள்ளதால் அந்நிறுவனங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இதனால் மின்னணு பொருட்களின் விலை யும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அரசு இந்திய நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் முதலீட்டைப் பெருக்கி, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவிலிருந்து ஏதேனும் வழி களில் தேவையானப் பொருட்களை உடனடியாகக் கிடைக்கச் செய்வதற் கான சாத்தியத்தை கண்டறிய வேண்டும். அதன் பிறகு இந்தியா பிற நாடுகளுக்கு விநியோகம் செய்யும் அளவில் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x