

முன்னணி இ-காமர்ஸ் நிறுவன மான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) ராஜிவ் மங்ளா நியமிக்கப்பட்டிருக் கிறார்.
இவர் அடோப் நிறுவனத் தில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடோப் நிறுவனத்துக்கு முன்பாக தொழில் முனைவோராக இருந்தார். இரு நிறுவனங்களை தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்தார். புதிய பணியில் ஸ்நாப்டீல் நிறுவனத் தின் தொழில்நுட்பப் பிரிவை மேம் படுத்துவார்.
ஸ்நாப்டீல் குடும்பத்தில் ராஜிவை வரவேற்கிறோம் என்று நிறுவனத்தின் நிறுவனர் ரோகித் பன்சால் தெரிவித்தார்.
தற்போது தொழில்நுட்ப பிரிவில் 1,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை இரட்டிப் பாக ஸ்நாப்டீல் திட்டமிட்டு வருகிறது.