

அரசுக்குச் செலுத்த வேண்டிய வருவாய் பகிர்வு தொகையைச் செலுத்த கூடுதல் அவகாசம் கேட்டுவோடஃபோன் ஐடியா நிறுவனம்உச்ச நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், மனுவைவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஏஜிஆர் தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது.
ஆனால், அந்த உத்தரவைநிறுவனங்களும், தொலைத் தொடர்பு துறையும் பின்பற்றாமல் அவமதித்ததாக உச்சநீதிமன்றம் கடுமையாகச் சாடியது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் ஏஜிஆர் தொகை நிலுவையை நிறுவனங்கள் செலுத்த வேண்டுமென தொலைத் தொடர்பு துறை நெருக்கடி கொடுத்தது. ஏர்டெல் கணிசமானதொகையை ஏற்கெனவே திரட்டியதால் நிலுவைதொகையைச் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்தது. ஆனால், வோடஃபோன் நிதி நெருக்கடியில் இருப்பதால் கூடுதல் அவகாசம் கோரிதிங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், வோடஃபோன் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து நிராகரித்தது.
தற்போது வோடஃபோன் ரூ.2,500 கோடி செலுத்தி உள்ளது. டாடா டெலி சர்வீசஸ் 2,190 கோடி ஏஜிஆர் நிலுவை செலுத்தியுள்ளது.