Published : 17 Feb 2020 08:02 AM
Last Updated : 17 Feb 2020 08:02 AM

பிரபலமாகும் டிஜிட்டல் சார்ஜிங் கியோஸ்க்

மொபைல் பயன்படுத்தாதவர்கள் இந்த டிஜிட்டல் யுகத்தில் ரொம்பவே குறைவு. பலருக்கு மொபைல் பயன்பாட்டுக்கு ஒரு நாளுக்கு 24 மணி நேரம்கூட போதாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட மொபைல் விஷயத்தில் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சினை ‘சார்ஜிங்’.

இந்தப் பிரச்சினைக்கு அகமதாபாத்தைச் சேர்ந்த ‘சார்ஜ்இன்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தீர்வுகாண முயற்சித்து, பொது இடங்களில் பயன்படுத்தக்கூடிய கட்டண முறையிலான டிஜிட்டல் சார்ஜிங் கியோஸ்க்கை உருவாக்கியுள்ளது. 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கியோஸ்க், தற்போது இந்தியாவில் சில இடங்களில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. முக்கியமாக ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் கோயில் நகரமான உஜ்ஜெய்ன் ஆகிய இடங்களில் இந்த கியோஸ்க் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. இதில் லாக்கர்கள் உள்ளன. கட்டணம் செலுத்தினால் லாக்கர் திறக்கும். லாக்கரில் உள்ள சார்ஜிங் பாயின்ட்டில் மொபைலை இணைத்து லாக்கரை மூடிவிடலாம். இந்த எந்திரம் ஒரு ரசீதை வழங்கும். அந்த ரசீதை மீண்டும் ஸ்கேன் செய்து லாக்கரை திறந்து மொபைலை எடுத்துக்கொள்ளலாம். பார்கோட், க்யூஆர்கோட் ஸ்கேனர் ஆகிய வசதிகள் இதில் உள்ளன. பல இடங்களில் மொபைல் சார்ஜிங் வசதிகள் இருந்தாலும், மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு கூடவே நின்று காவல் காக்க வேண்டும். இதில் அந்தப் பிரச்சினை இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x