கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: இந்திய இறக்குமதி 28% சரிவு

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: இந்திய இறக்குமதி 28% சரிவு
Updated on
1 min read

சீனாவில் பரவியுள்ள உலகை அச்சுறுத் தும் கரோனா வைரஸ் தாக்குதல் காரண மாக இந்தியாவின் இறக்குமதி 28 சதவீத அளவுக்கு பாதிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதி யாகும் 5 முக்கிய இறக்குமதி பொருட் கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார இயந் திரங்கள், பொறியியல் கருவிகள், ஆர் கானிக் வேதிப் பொருட்கள், பிளாஸ் டிக், ஆப்டிகல் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்றவை பெரும் பாலும் சீனாவையே சார்ந்துள்ளன. இவற்றின் இறக்குமதி முற்றிலுமாக நின்றுபோயுள்ளது.

இதன் விளைவாக கட்டுமானம், போக்குவரத்து, ரசாயனம், இயந்திர பொருள் உற்பத்தி ஆகியவை பாதிக்கப் படும் சூழல் உருவாகியுள்ளது. சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 5 சதவீதம் மட்டுமே. ஆனால் இறக்குமதி அதிகமாக உள்ளது. 2018-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த இறக்குமதி அளவு 50,700 கோடி டாலராகும். இதில் 14 சதவீதம் அதாவது 7,300 கோடி டாலர் அளவுக்கு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பிப்ர வரி 14-ம் தேதிக்குப் பிறகு நிலைமை சீர டையும் என முதலில் சீனா தெரிவித் தது. ஆனால் இதுவரை நிலைமை சீரடைய வில்லை. ஆர்கானிக் பொருள் இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆர் கானிக் வேதிப் பொருட்களில் 40 சதவீதம் சீனாவிலிருந்து மட்டும் இறக்குமதி செய் யப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மீதம் இறக்குமதி யாகிறது. இதேபோல மின்சார இயந்திரங் கள் இறக்குமதியும் 40 சதவீத அளவுக்கு உள்ளது. தற்போதைய நிலை நீடிக்கும்பட் சத்தில் இறக்குமதி பாதிப்பு அளவு 40 சதவீதம் வரை உயரும் என தெரிகிறது.

ஆப்டிகல், சர்ஜிகல் பொருட்களில் 54 சதவீதம் சீனாவையே நம்பி உள்ளது. இதில் 28 சதவீதம் முழுவதுமாக சீனாவையே சார்ந்துள்ள நிலைதான் உள்ளது. இதேபோல மருந்து தயாரிப்பு துறையும் பெருமளவு மூலப்பொருளுக்கு சீனாவையே சார்ந்துள்ளது. 80 சதவீதம் முதல் 90 சதவீத அளவுக்கு மூலப் பொருட்களுக்கு இந்தியா சீனாவையே நம்பி உள்ளதாக துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in