

யூனியன் வங்கியின் நான்காம் காலாண்டு நிகரலாபம் 26.7 சதவீதம் சரிந்து ரூ. 578.96 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 789.38 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 8,444.95 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 7,500.59 கோடியாக இருந்தது.
நான்காம் காலாண்டில் வாராக் கடனுக்கு ரூ 920.52 கோடி ஒதுக்கப்பட்டது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.655.59 கோடி ஒதுக்கப்பட்டது.
வங்கியின் வாராக் கடன் அளவு நான்காம் காலாண்டில் 2.33 சதவீதமாக உயர்ந்து ரூ. 5,340.08 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 1.61 சதவீதமாக அதாவது ரூ. 3,353 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு 4.08 சதவீதமாக அதாவது ரூ. 9,563.72 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இது ரூ. 6,313.83 கோடியாக இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 32,170.93 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இது ரூ. 27,676.73 கோடியாக இருந்தது. வங்கியின் பங்கு விலை திங்கள்கிழமை 2.89 சதவீதம் உயர்ந்து ரூ. 149.45-க்கு விற்பனையானது.