

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத் தின் கணக்குகளை தணிக்கை செய் ததில் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.பி. மைனாக் முறை கேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவர் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக கேர் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் மீதான குற்றச் சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலை யில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேர் நிறுவனத்துக்கு செபி உத்தர விட்டதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
சிஇஓ ராஜினாமா
ஏற்கெனவே இதே குற்றச்சாட்டி னால் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பில் இருந்துவந்த ராஜேஷ் மோகாஷி கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து தற்போது அதன் தலைவர் எஸ்.பி. மைனாக் ராஜினாமா செய்துள் ளார். எல்ஐசி-யின் முன்னாள் நிர்வாக இயக்குநரான மைனாக், கடந்த 2015- ம் ஆண்டில் கேர் ரேட் டிங்ஸின் இயக்குநர்கள் குழுவில் இணைந்தார்.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறு வனத்தை தணிக்கை செய்யும் போது, அந்நிறுவனம் கடும் நிதிச் சிக்கலில் இருப்பது தெரிந்தும் அந்நிறுவனத்துக்கு சாதகமான மதிப்பீடு வழங்கும் வகையில் கேர் ரேட்டிங்ஸின் உயர் அதிகாரிகள் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த அதிகாரிகளின் செயல்பாடுகளை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி பொருளாதார ஆலோசக நிறுவன மான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறு வனம் கேர் ரேட்டிங்ஸ் அதிகாரி களின் தொலைபேசி அழைப்புகள், வாட்ஸப் குறுஞ் செய்திகள், மின் னஞ்சல்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து, அந்த அறிக் கையை சில தினங்களுக்கு முன் செபிக்கு அனுப்பியுள்ளது. அந்த தணிக்கை அறிக்கையில் கேர் நிறுவனத்தின் தலைவர் எஸ்.பி. மைனாக் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மோகாஷி உள்ளிட்டோர் நிறுவனங்களை தணிக்கை செய் வதில் முறைகேடாக நடந்து கொண் டிருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் கேர் ரேட்டிங்ஸின் பங்கு மதிப்பு 7.29 சதவீதம் அள வில் சரிந்து ரூ.538.70-க்கு வர்த்தக மானது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறு வனத்தை இக்ரா, கேர் மற்றும் இந் தியா ரேட்டிங்ஸ் ஆகிய மூன்று மதிப் பீட்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்தன. மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் (என்சிடி) தொடர்பான மதிப்பீட்டில் இந் நிறுவனங்கள் மிகக் கவனக் குறைவாக நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி கடந்த டிசம்பர் மாதம் இம்மூன்று நிறுவனங்களுக்கும் செபி ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிதி நெருக்கடியில் இருப்பது தெரிந் தும் சாதமாக மதிப்பீடுகளை வழங் கியதாக இக்ரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை கடந்த மே மாதம் செபி விசாரணைக்கு உட் படுத்தியது. அதைத் தொடர்ந்து இக்ராவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் இருந்த நரேஷ் தாக்கரை இக்ரா நிறு வனம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேற்றியது குறிப்பிடத் தக்கது.
வங்கிசாரா நிதி நிறுவனமான ஐஎல் அண்ட் எஃப்எஸ் 2018-ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை யில் அதன் இயக்குநர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்நிறுவனத்தை தணிக்கை செய்த நிறுவனங் களுக்கும் இம்மோசடியில் பங்கு இருப்பதாக கூறப்பட்ட நிலை யில், அந்நிறுவனங்களும் விசா ரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.