ஆன்லைன் மூலம் உதிரிபாக விற்பனை: டொயோடா தீவிரம்

ஆன்லைன் மூலம் உதிரிபாக விற்பனை: டொயோடா தீவிரம்
Updated on
1 min read

டொயோடா கிரிலோஸ்கர் மோட்டார்ஸ் விரைவில் ஆன்லைன் மூலம் உதிரிபாக விற்பனையை தொடங்க உள்ளது. இந்திய வாடிக்கையாளர் சேவையில் ஒரு பகுதியாக பல்வேறு மாடல்களைச் சேர்ந்த உதிரிபாகங்களும் விற்பனை செய்ய உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு இந்தி யாவில் பத்து லட்சம் வாடிக்கை யாளர்கள் உள்ளனர். உடனடித் திட்டமாக இந்த வாரத்தில் பெங்களூருவிலிருந்து ஆன்லைன் மூலமான விற்பனையை தொடங்க உள்ளது. அடுத்தடுத்த மெட்ரோ நகரங்களில் 2016 ஆம் ஆண்டுக்குள் இந்த செயல் பாடுகளை விரிவாக்கம் செய்ய உள்ளது.

இந்திய வாடிக்கையாளர் களுக்கு உயர்தரமாக சேவை வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிரந்தர இயக்குநருமான சேகர் விஸ்வ நாதன் கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் உதிரிபாகங்கள் விற்பனை தொடங்குவதால் வாடிக்கையாளர் சேவை எளிதாகும் என்றும் செய்தி யாளர்களிடம் குறிப்பிட்டார்.

அடிக்கடி மாற்ற வேண்டிய உதிரிபாகங்கள் உட்பட நிறுவனம் 400 வகையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்கிறது. பேன் பெல்ட், ஆயில் பில்டர் மற்றும் வைப்பர்ஸ் போன்ற உதிரிபாகங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனம் பிற மாடல்களாக இனோவா உட்பட எடியாஸ் செடான் மற்றும் எதியாஸ் லிவா போன்ற மாடல்களுக்கான உதிரி பாகங்களையும் விற்பனை செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in