

பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் 205 நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையான சரிவைச் சந்தித்தன.
நேற்றைய வர்த்தகத்தில் அபான் ஆஃப்ஷோர், ஏபிஜி ஷிப்யார்டு, அதானி பவர், கெயில், ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 205 நிறுவனப் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஆம்டெக் ஆட்டோ பங்கு விலை நேற்று அதிகபட்சமாக 17% வரை சரிந்தது.
நெஸ்லே பங்கு உயர்வு
நெஸ்லே நிறுவனப் பங்கு 2 சதவீதம் உயர்ந்தது. இதேபோல வீடியோகான் நிறுவனப் பங்கு 4.36 சதவீதம் உயர்ந்தது.
ஒரிசா ஸ்பாஞ்ச் அயர்ன், இமாமி இன்பிராஸ்டிரக்சர், ஜிண்டால் வேர்ல்டுவைடு, பின்னி மில்ஸ் ஆகிய நிறுவனப் பங்கு களும் கணிசமாக உயர்ந்தன. 47 நிறுவனப் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை எட்டின.