

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மத்திய அரசு, ரூ.81,043 கோடியை ஜிஎஸ்டி இழப்பீட்டாக மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, கடந்த சில மாதங்களாக மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் முதல் பாதியில் ரூ.81,043 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 2018 - 2019 நிதி ஆண்டில் மொத்தமாக ரூ.81,141 கோடி அளவில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டிக்கான இழப்பீடு வழங்கியுள்ளது.
நடப்பு ஆண்டில் செப்டம்பர் வரையில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்கான இழப்பீடு ரூ.35,000 கோடி விரைவில் வழங்க இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.