Published : 10 Feb 2020 09:40 AM
Last Updated : 10 Feb 2020 09:40 AM

தொழில் நிறுவனங்களுக்கு உதவவே மத்திய அரசு விரும்புகிறது: நிர்மலா சீதாராமன் தகவல்

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுடன் தொடச்சியாக இணக்கமான உறவு பேணுவதையே மத்திய அரசு விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளர். தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிக்கல் இல்லாத முறையில் வரி செலுத்துவதற்கான சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கும் என்று அவர் கூறினார்.

நேற்று கொல்கத்தாவில் தொழில் மற்றும் வர்த்தக நிறு வனங்களின் உறுப்பினர்களைச் சந்தித்த அவர், வரி தொடர்பான செயல்பாடுகளை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு, வரி மதிப்பீடுகளை மனிதர்களின் தலையீடு இன்றி, இயந்திரங்களின் வழியே மேற்கொள்ளும் முறையை கொண்டுவந்திருப்பதாகக் கூறினார். புதிய தொழில்நுட்பங் களின் வழியே இத்தகைய மாற் றங்கள் சாத்தியப்படும் என்றார்.

ஜிஎஸ்டி தொடர்பாக அவர் கூறியபோது, வரி குறைப்பு தொடர்பாக மாநில அரசுகள்தான் தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். அப்போது தான் உரையாடலுக்கான சூழல் உருவாகும் என்றார்.

நிதி மோசடி, வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ச்சியாக எச்சரித்து வந்தது. இதனால் புதிய முடிவுகள் மேற்கொள்ள தயக்கமாக உள்ளதாக நிறுவனத் தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தொழில் தோல்விகள் குற்றமாகக் கருதப்படாது. வேண்டுமென்றே தவறு இழைப்பவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட் ஜெட்டிலும் அதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்சமயம் இந்தியாவில் முதலீடுகள் கடுமையாகக் குறைந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் தொழில் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. இந்நிலையில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும்வகையில் மத்திய அரசு செயல்படும் என்று சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதித் துறை செயலர் ராஜீவ்குமார் கூறுகையில், “நேர்மையான நிறுவனங்களுக்கு கடன் வசதி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு கடன் தாராளமாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியிருக்கிறது. சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிட்டி இதற்காக குழு ஒன்றை அமைத்து நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை ஆய்வு செய்து நேர்மையான நிறுவனங்கள், மோசடி நிறுவனங்கள் என பட்டியலிடும் பணி தொடங்கப்பட உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x