

ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் பட்டியலில் இருந்து சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் கையுறைகள் நீக்கப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து, கடந்தமாதம் மத்திய அரசு அனைத்துவிதமான பாதுகாப்பு உபகரணங்களுக்கும் ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்நிலையில் தற்போது, சர்ஜிக்கல் மாஸ்க், கையுறைகள் போன்றவற்றைஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.