Published : 08 Feb 2020 03:30 PM
Last Updated : 08 Feb 2020 03:30 PM

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சர்வதேச அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சற்று உயர்ந்தது. தொடர்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ.3898க்கும், பவுன் ரூ.200 ரூபாய் உயர்ந்து ரூ.31184 க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32744க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.49.90க்கு விற்பனையாகிறது.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x