Last Updated : 08 Feb, 2020 01:47 PM

 

Published : 08 Feb 2020 01:47 PM
Last Updated : 08 Feb 2020 01:47 PM

சீனாவில் அனைத்து கடைகள், மையங்களையும் மூடியது ஆப்பிள் நிறுவனம்

வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக, ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் தனது 42 கிளைகளையும் தொடர்பு மையங்களையும் மூடியுள்ளது.

மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்ற விவரத்தையும் அதுதெரிவிக்கவில்லை.

முன்னணி சுகாதார நிபுணர்களின் சமீபத்திய ஆலோசனையின் அடிப்படையில் சீனாவில் உள்ள 42 கடைகளையும் மூடுவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கி கடந்த ஒரு மாத காலமாகத் தொடங்கி இன்றுவரை இந்த வைரசுக்கு இதுவரை அந்நாட்டில் 722 பேர் பலியாகியுள்ளனர்.

கடைகள், தொடர்பு மையங்கள் மூடுவது குறித்து ஆப்பிள் நிறுவனத்தில் துணைத் தலைவர் டாய்ர்ட்ரி ஓ' பிரைன் தனது ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தற்போது சீனாவில் இயங்கிவரும் அனைத்து ஆப்பிள் சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்படுகின்றன. கூடுதல் சுத்தம், சுகாதார நெறிமுறைகள் மற்றும் பொது இடங்களைச் சுற்றியுள்ள உள்ளூர் கட்டுப்பாடுகள் ஆகியவையால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனினும் அடுத்தவாரம் கார்ப்பரேட் அலுவலகங்களும் தொடர்பு மையங்களும் மீண்டும் திறக்க நிறுவனம் வேகமாக இயங்கி வருகிறது.அதேபோல ஆப்பிளின் சில்லறை விற்பனை கடைகளும் அடுத்த வாரம் மீண்டும் திறக்க ஒரு தேதியை தீர்மானிக்க முயன்று வருகிறோம்.

கடைகளில் பணிபுரியும் ஆப்பிள் ஊழியர்கள் கடைகள் மீண்டும் திறக்கப்படும் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து விதமான முடிவுகள் குறித்து அவரவர்களின் மேலாளரை அவ்வப்போது தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளவும்.

இவ்வாறு ஆப்பிள் நிறுவன துணைத் தலைவர் ஓ பிரைன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x