

சர்வதேச அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சற்று உயர்ந்தது. தொடர்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ.3862க்கும், பவுன் ரூ.200 ரூபாய் உயர்ந்து ரூ.30896க்கும் விற்பனையாகிறது.
சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32440க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து ரூ.49.80க்கு விற்பனையாகிறது.