Last Updated : 20 Aug, 2015 10:01 AM

 

Published : 20 Aug 2015 10:01 AM
Last Updated : 20 Aug 2015 10:01 AM

காபி, ரப்பர் துறைகளில் இப்போது அந்நிய முதலீடு கிடையாது

காபி மற்றும் ரப்பர் தோட்டத்துறை யில் உடனடியாக அந்நிய நேரடி முத லீடுகள் (எப்டிஐ) அனுமதிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் அமிதாப் காந்த், இதில் எந்த விதமான ஊகங்களுக் கும் இடமில்லை என்று குறிப்பிட் டுள்ளார். தற்போது தேயிலை உற்பத்தி துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும் இதர தோட்டத்துறை மற்றும் செயல்பாடுகளில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க வில்லை என்று குறிப்பிட்டார்.

சிஐஐ ஏற்பாடு செய்திருந்த இந்திய - சீனா வர்த்தம் குறித்த கருத்தரங்கில் பேசியபோது இந்த தகவலை காந்த் குறிப்பிட்டார். மேலும் இந்திய சீன வர்த்தகத்தில் மிகப்பெரிய பற்றாக்குறை நிலவு கிறது என்றவர், சீன நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவு முத லீடு செய்ய வேண்டும் என்றார்.

சீனாவில் இந்தியாவும் மிகப் பெரிய சந்தையை வைத்துள்ளது. நேரடியான வர்த்தகத்தில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்றார். சீன நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீடு 112 கோடி டாலராக உள்ளது என்று குறிப்பிட்டவர், இது மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 0.44 சதவீதம்தான் என்றார்.

சீன நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அதிகரித்துக் கொள்வதற்கு ஏற்ப முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் தொடங்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர தயாராக இருப்பதாகவும் காந்த் பேசினார்.

சீனா இரண்டு தொழில் பூங்காக் களை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட் டவர், மேலும் பல தொழில் பூங்காக்களை அமைக்க வேண்டும் என விரும்புகிறோம். இதற்கு ஏற்ப சீன நிறுவனங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

அரசு புள்ளி விவரங்கள்படி 2014-15 ஆம் ஆண்டில் இயற்கை ரப்பர் இறக்குமதி அதிகரித்து 4,42,130 டன்னாக உள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 3,60,263 டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. 2012-13 ல் இறக்குமதி அளவு 2,62,753 டன்னாக இருந்தது.

இயற்கை ரப்பர் உற்பத்தி 12 ஆண்டுகள் இல்லாத வகையில் மிக வும் குறைந்த அளவாக 2014-15ம் ஆண்டில் 6,45,000 டன் என்கிற அள வில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2013- 14 ம் ஆண்டில் இது 7,74,000 டன்னாக இருந்தது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த அரசு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதற்கேற்ப இயற்கை ரப்பர் கொள்கைகள் வகுக்கப்பட்டு வரு கிறது. டயர் உற்பத்தி நிறுவனங்கள் தவிர பிற தொழில்துறைகளும் சேர்ந்து 2014-15 ஆண்டில் 10,18,000 டன் ரப்பர் பயன்படுத்தி உள்ளன என்று அரசு புள்ளி விவரங்கள் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x