பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்போம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்போம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
Updated on
1 min read

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது, பணவீக்கத்தையும், செலவுகளையும் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கு புதிய அரசு முன்னுரிமை கொடுக்கும் என்று செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சராக பொறுப் பேற்றுக்கொண்ட அருண் ஜேட்லி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது இந்திய பொருளா தாரம் கடுமையான சவாலை எதிர்நோக்கியுள்ளது. இத்தகைய சூழலில் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டா ளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது முக்கியம் என்று தெரிவித்தார். சவால்கள் என்பது தவிர்க்க முடியாதது. கடுமையான சூழ்நிலையில் தான் நிதி அமைச்சராக பொறுப் பேற்றுக்கொண்டிருப்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்றார் ஜேட்லி.

அரசியல் மாற்றம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு நம்பிக்கையை கொடுத் திருக்கும். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்த முடியும். புதிய அரசாங்கத்தின் முக்கிய பணியே நம்பிக்கையை அதிகப்படுத் துவதுதான். இதுதான் எங்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிற முக்கிய பணி.

இதற்கிடையே புதிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் நிதித்துறை செயலாளர் அர்விந்த் மாயாராம்.

அப்போது நடப்புக்கணக்கு பற்றாக்குறை இப்போதைக்கு சாதகமான நிலையில் இருக்கிறது. என்றாலும், சர்வதேச பொருளாதாரம் ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருப்பதால் நிதி அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றார். மேலும் நிதி அமைச்சரிடம் தற்போதைய பொருளாதார சூழ்நிலை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவை குறித்து நிதி அமைச்சரிடம் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான தகவல்படி 2013-14-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு (ஜனவரி - மார்ச்) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1.2 சதவீதமாக இருக்கிறது, அதாவது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 0.2 சதவீதம். ஆனால் கடந்த வருடம் இதே காலத்தில் 3.6 சதவீதமாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1.7 சதவீதமாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in