

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் அப் எனப்படும் நிறுவனங்கள் தற்போது கேப்பிடல் கெயின் வரியில் இருந்து முழுமையாக விலக்கு பெறலாம். அதுபோலவே வருமான வரியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறலாம். Fair மார்க்கெட் வேல்யு வரியிலிருந்தும் விலக்கு பெறலாம்.
இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டில் மேலும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரி செலுத்தும் சுமையை குறைக்க சில சலுகைகள் வழங்கபடுகின்றன. அதன்படி வரி செலுத்த வழங்கப்படும் அவகாசம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் பண பிரச்சினைக்காக தங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய தேவை இருக்காது. நீண்டகாலத்துக்கு தங்கள் கைவசம் வைத்திருக்க முடியும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
25 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 7 ஆண்டுகளில் முதல் 3 ஆண்டுகளுக்கு லாபத்தை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இனிமேல் 100 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும். அதுபோலவே சலுகைகளுக்காக தற்போது வழங்கப்படும் கால அளவான 7 ஆண்டு இனிமேல் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.