

ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர் வாக அதிகாரியாக இந்தியரான அர விந்த் கிருஷ்ணா(57) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன் றான ஐபிஎம் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்தியர் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐபிஎம் நிறு வனத்தில் கிளவுட் அண்ட் காக்னிட்டிவ் மென் பொருள் பிரிவுக்கான மூத்த துணைத் தலைவராக அர விந்த் கிருஷ்ணா பொறுப் பில் உள்ளார். இந்நிலையில் அவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தேர்ந்தெடுத்துள்ளது. தவிர, இயக்கு நர்கள் குழுவின் உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 6 முதல் ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்க உள்ளார்.
‘கிருஷ்ணா திறமைமிக்க தொழில் நுட்ப வல்லூர். ஐபிஎம்-ன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கிள வுட், பிளாக்செயின், குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சியில் கிருஷ்ணா மிக முக்கிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்’ என்று தற்போது சிஇஓ-வாக பொறுப் பில் இருக்கும் விர்ஜீனியா ரோமெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் பிறந்தவ ரான அரவிந்த் கிருஷ்ணா, ஐஐடி கான்பூரில் மின் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற் றார். பிறகு அர்பானா சாம் பேனில் இல்லினாய்ஸ் பல் கலைக்கழகத்தில் முனை வர் பட்டம் பெற்றார். 1990-ல் ஐபிஎம்-ல் சேர்ந்தார்.
ஐபிஎம்-ன் சிஇஓ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய முன்னணி நிறுவனங் களின் தலைமைப் பொறுப்பில் இருக் கும் இந்தியர்கள் பட்டியலில் அரவிந்த் கிருஷ்ணா இணைந்துள்ளார். ஆல்ஃபபெட் மற்றும் கூகுளின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டு சிஇஓ- வாக அஜய் பங்கா, அடோப் நிறுவனத்தின் சிஇஒ-வாக சாந்தனு நாராயணன் ஆகியோர் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.