இருபது ஆண்டுகளில் ஹூண்டாய் 30 லட்சம் கார்கள் தயாரிப்பு

இருபது ஆண்டுகளில் ஹூண்டாய் 30 லட்சம் கார்கள் தயாரிப்பு
Updated on
1 min read

ஹூண்டாய் நிறுவனம் இந்திய ஆலை யில் தயாரான 30 லட்சமாவது காரை நேற்று கொலம்பியச் சந்தைக்கு ஏற்றுமதி செய்தது. ஹூண்டாய் நிறு வனம் சென்னையில் உள்ள அதன் ஆலையில் இதுவரை 30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளது.

தென் கொரிய நிறுவனமான ஹூண் டாய், 1996-ம் ஆண்டு சென்னையில் அதன் இந்தியக் கிளையைத் தொடங்கி யது. தமிழகத்தில் இருங்காட்டுக் கோட்டையில் தயாரிப்பு ஆலை உள் ளது. இங்கு தயாரிக்கப்படும் கார்களை உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ‘ஆரா’ 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ஆரா காருடன் 30 லட்சம் தயாரிப்புகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரா, கிராண்ட் ஐ10, எக்ஸன்ட், நியோஸ், ஆரா, எலைட் ஐ20, வெர்னா, வென்யூ, ஐ20 ஆக்டிவா, கிரெட்டா ஆகிய 10 மாடல்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்கிறது. 33 லத்தீன் அமெ ரிக்க நாடுகளுக்கும், 28 ஆப்ரிக்க நாடுகளுக்கும், 26 ஆசியா பசிபிக் பிரந்தியங்களுக்கும், ஒரு ஐரோப்பிய நாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in