

டைகான் அமைப்பின் விருது வழங்கும் விழாவில் தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான என்.ஆர். நாராயணமூர்த்தி. 82 வயதாகும் தொழிலதிபர் ரத்தன் டாடாவிடம் 72 வயதாகும் நாராயணமூர்த்தி ஆசி பெறும் வீடியோ காட்சிகள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டைகான்ஆண்டு விழாவில் ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகளை ரத்தன் டாடா தனதுஇன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். டைகான் அமைப்பின் 11-ம்ஆண்டு விழாவில் ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தொழில்துறையில் ரத்தன் டாடாவகுத்தளித்துள்ள நெறிமுறைகள், நம்பகத்தன்மை அனைத்துமே எதிர்வரும் தொழில்முனைவோருக்கும், தொழில்துறையினருக்கும் வழிகாட்டுதலாக அமையும் என்று டைகான்குறிப்பிட்டுள்ளது. வெறுமனே சொத்து சேர்ப்பதை மட்டுமேகுறிக்கோளாகக் கொண்டிராமல் தொழில் துறை வளர்ச்சிமூலம் நாட்டின் வளர்ச்சிக்கும்அதன் மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பைஉருவாக்கியதற்காகவும் ரத்தன்டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதாக டைகான் அமைப்பின் மும்பைபிரிவு தலைவர் அதுல் நிஷார் தெரிவித்துள்ளார்.
வீடியோ காட்சிகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ள டைகான் அமைப்பு இதை வரலாற்று நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளது
டைகான் அமைப்பின் விழாவில் எனது நீண்டகால நண்பர் நாராயணமூர்த்தியிடமிருந்து விருது பெறுவது மிகவும் பெருமையாகவும், கவுரவமாகவும் இருக்கிறது என்று ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.