Published : 29 Jan 2020 05:00 PM
Last Updated : 29 Jan 2020 05:00 PM

தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன?

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்து திருமண சீசன் தொடங்குவதால் உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த சில தினங்களாக தங்கள் விலை ஏறுமுகமாக இருந்தது. பவுனுக்கு 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 19 குறைந்து ரூ.3856க்கும், பவுன் ரூ.152 ரூபாய் குறைந்து ரூ.30848க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32392 க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 80 பைசா குறைந்து ரூ.49.20க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x