தமிழகத்தில் 125 புதிய கிளைகள்: ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டம்

தமிழகத்தில் 125 புதிய கிளைகள்: ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டம்
Updated on
1 min read

தமிழகத்தில் புதிதாக மேலும்125 கிளைகளைத் தொடங்க ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு உள்ள கிளைகளின் எண்ணிக்கை 400 ஆக உயரும் என்று வங்கியின் தமிழ்நாடு மண்டல தலைவர் ஆர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வங்கியின் வர்த்தகம் ரூ.1.5 லட்சம் கோடியை எட்டிஉள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதில் ரூ.89 ஆயிரம் கோடிதொகை கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.62 ஆயிரம் கோடி தொகை சேமிப்பு மூலம் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்களிப்பு 9 சதவீதஅளவுக்கு சந்தையைப் பிடித்துள்ளதாகவும் தமிழகத்தில் வங்கிக்கு 16 சதவீத அளவுக்கு சந்தை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சென்னை அண்ணா சாலையில் 1995-ம்ஆண்டு முதலாவது கிளை தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் தமிழகம் முழுவதும் தங்கள் வங்கிக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளதாகக் கூறினார். வங்கிக்கு தற்போது தமிழகம் முழுவதும் 284 கிளைகளும், 1,172 ஏடிஎம்களும் உள்ளதாகக் கூறினார். புதிய கிளைகள் ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரம் முதல் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது வங்கியில் 7 ஆயிரம் பணியாளர்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in