

பார்தி ஆக்ஸா லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஜூன் 2011 லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.
நிதிச்சேவைகள் துறையில் உலக அளவில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
ஆஸ்திரேலியா அண்ட் நியூஸிலாந்து வங்கியில் நிர்வாக இயக்குநர் மற்றும் இந்த வங்கியின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான வர்த்தக வங்கி பிரிவு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது பணிக்காலத்தில் ஏஎன்இசட் வங்கி ஆசியாவில் வர்த்தக வங்கிச் சேவை தொடங்க முக்கிய பங்காற்றியவர்..
ஸ்காட்லாந்து ராயல் வங்கியின் ஆசிய செயல்பாடுகளுக்கான வர்த்தக வங்கி சேவை பிரிவுக்கு தலைவராக பணியாற்றியுள்ளார்.
சிட்டி வங்கியில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் 9 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடைசியாக குளோபல் கமர்சியல் வங்கியில் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.
மும்பை பல்கலைக்கழகத்தின் சைடன்ஹாம் கல்லூரியில் வணிகவியல் மற்றும் நிதி மேலாண்மையில் இளநிலை பட்டமும், ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை உயர்கல்வியும் முடித்தவர்.