

இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி தற்காலிக மானதாகத் தெரிகிறது. அவ்வகையில் இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இந் தியாவின் வளர்ச்சி 4.8 சதவீத மாகக் குறையும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) சமீபத்தில் கணிப்பு வெளியிட்டு இருந்து. இந்தியாவின் பொருளா தார சரிவால் உலகப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக ஐஎம்எஃப் கூறியிருந்தது.
இந்நிலையில் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட ஐஎம்எஃப் சிஇஓ கிறிஸ் டலினா ஜார்ஜீவா, இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது என்று நம்புவ தாகவும், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி மேம்படத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரி வித்தார்.
உள்நாட்டுத் தேவை மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங் களிடம் பணப்புழக்கம் குறைந் துள்ளதால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருப்பதாக ஐஎம்எஃப் தெரிவித்து இருந்தது. விளைவாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21 நிதி ஆண்டில் 5.8 சதவீதமாகவும், 2021-22-ல் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கூறியிருந்தது.
இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார மந்த நிலையால், உலகளாவியப் பொருளாதார வளர்ச்சி 2019-ல் 2.9 சதவீதமாகக் குறையும் என்றும், அது 2020-ல் 3.3 சதவீதமாகவும், 2021-ல் 3.4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இது குறித்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறிய போது, ‘தற்போது உலகப் பொரு ளாதார வளர்ச்சி மந்தமான நிலை யில் உள்ளது. உலக நாடுகள் தெளிவான நிதிக் கொள்கைகளை மேற் கொள்ள வேண்டும். அமைப்பு ரீதியாக சீர்திருத்தங்கள் மேற்கொள் ளப்பட வேண்டும்’ என்றார்.
தற்போது வர்த்தக உறவு தொடர்பாக சீனா - அமெரிக்கா இடையிலான மோதல் தணிந்திருப்பது உலகளாவியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்று கூறிய அவர், சில ஆப்பிரிக்கா நாடுகளும் நன்றாக செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.