

ஹெச்டிஎப்சி நிறுவனம் கடன் பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ. 2,000 கோடி நிதி திரட்டி இருக்கிறது. எதிர்கால மூலதன நிதி திரட்ட இந்த தொகை திரட்டப்பட்டிருக்கிறது.
இந்த கடன்பத்திரங்களின் காலம் ஐந்தாண்டுகள். 8.5 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. முன்னதாக மாற்றத்தகாத கடன் பத்திரங்கள் (என்சிடி) மூலம் ரூ. 5,000 கோடி திரட்டப்போவதாக ஹெச்டிஎப்சி கூறி இருந்தது.
நீண்டகாலத்துக்கு தேவையான நிதியை திரட்ட பலவழிகளிலும் நிறுவனம் திட்டமிட்டிருருந்தது. ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.2,204 கோடி ஆகும்.