

இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சரிவை சந்தித்துள்ளது. 2019 டிசம்பரில் ஏற்றுமதி 1.8 சதவீதம் சரிந்து 27.36 பில்லியன் டாலராக உள்ளது. குறிப்பாக பெட்ரோலியம், பொறியியல் பொருட்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளன.
அதேபோல், இறக்குமதியும் டிசம்பர் மாதம் 8.83 சதவீதம் சரிந்து 38.61 பில்லியன் டாலராகஉள்ளது. தங்கம் இறுக்குமதியும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது. இறக்குமதி பெருமளவில் சரிந்துள்ளதால் நாட்டின் வர்த்தகப்பற்றாக்குறை குறைந்துள்ளது. 2018 டிசம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 14.49 பில்லியன் டாலராகஇருந்த நிலையில், 2019 டிச. 11.25பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 1.96% சரிந்து239.29 பில்லியன் டாலராக உள்ளது.இறக்குமதி 8.97% சரிந்து 357.39 பில்லியன் டாலராக உள்ளது.
எம்இஐஎஸ் திட்டத்தின்கீழ் அரசு வழங்க வேண்டிய நிதி ஐந்து மாதங்களாக வழங்கப்படாத நிலையில் ஏற்றுமதியாளர்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால்புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.