

இந்திய அரசு குறித்து மலேசிய பிரதமர் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு கடந்த வாரம் எச்சரிக்கை அனுப்பியது.
காஷ்மீர் விவகாரம் மற்றும் தேசிய குடியுரிமை திருத்த சட்டம்தொடர்பாக மலேசிய பிரதமர் கடுமையான கருத்து தெரிவித்திருந்ததை தொடர்ந்து மத்திய அரசு இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போது மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில்வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
கச்சா பாமாயில் இறக்குமதிகுறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் நிறுவனங்கள் அதையும் இறக்குமதி செய்ய முன்வரவில்லை. மலேசியாவுக்குப்பதிலாக இந்தோனேசியாவிலிருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா, தனது இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தினால் அது மலேசியாவுக்கு பெரும் நெருக்குதலாக அமையும். பாமாயிலைப்பொருத்தமட்டில் மலேசியாதான் விலையை நிர்ணயிக்கும் நாடாக உள்ளது. மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து 90 லட்சம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதிசெய்கிறது. மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் கச்சா பாமாயில்ஒரு டன் விலை 800 டாலராகும். இதை 810 டாலருக்கு இந்தோனேசியாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்கின்றன.