2020-21 மத்திய பட்ஜெட்டில் வாகனத் துறையை மீட்டெடுக்கும் திட்டங்கள் வேண்டும்: ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை

2020-21 மத்திய பட்ஜெட்டில் வாகனத் துறையை மீட்டெடுக்கும் திட்டங்கள் வேண்டும்: ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை
Updated on
1 min read

பிப்ரவரி 1-ம் தேதி, வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப் பட உள்ள நிலையில், வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்செய்யும் வகையில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்று வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

வாகனங்களுக்கான ஜிஎஸ்டி, எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக் குவிக்கும் வகையில் அதன் லித்தி யம் அயான் பேட்டரி மீதான இறக்கு மதி வரியை குறைக்க வேண்டும் என்று வாகன நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே வாகன நிறுவனங் கள் நெருக்கடியில் உள்ளன.

வாகன விற்பனை மோசமான அளவில் சரிந்ததால், நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்தன. வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவனங் கள், விற்பனையகம், சர்வீஸ் சென் டர் என வாகனங்கள் தொடர் புடைய தொழில்களும் முடங்கின. கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேர் வேலை இழந்ததாககக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய பட்ஜெட் டில் வாகனத் துறையின் நெருக் கடியைப் போக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் விற் பனையாகும் வாகனங்கள் பிஎஸ்6 விதியைப் பின்பற்றி தயாரிக் கப்பட்டு இருக்க வேண்டும்.

இதனால் புதிய வாகனங்களுக் கான தயாரிப்புச் செலவு அதிகரித் துள்ளது. தவிரவும் அரசின் ஜிஎஸ்டி யால் அதன் விற்பனை விலையும் அதிகரிக்கிறது. இந்நிலையில் மக்கள் வாகனங்கள் வாங்க முன் வருதில்லை. இந்நிலையில் அரசு வாகனங்கள் தொடர்பான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள் ளது. தற்போது வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதமாக உள்ளது. அதை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வாகன பதிவுக் கான தொகையையும் அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பழைய வாகனங்களின் விற்பனை யும் பாதிக்கப்படுகிறது. இந்நிலை யில் அரசு பதிவுத் தொகையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக் கும் வகையில் சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. கூடவே, லித்தியம் அயான் பேட்டரி யின் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in