

மோடி அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கு கற்பனை செய்ய முடியாத இலக்கு என்று பொருளாதார நிபுணர் ஆர். நாகராஜ் தெரிவித்துள் ளார். தற்போது இந்தியப் பொருளா தாரம் மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. இந்த நிலையில் 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை 2025-ம் ஆண்டுக்குள் எட்டுவோம் என்று கூறுவது சாத்தியமில்லாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான அரசு, 2025-க்கு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டது. அதன் அடிப்படையில் நடப்பு நிதி ஆண்டுக் கான பட்ஜெட்டும் வகுக்கப்பட்டது. ஆனால், இந்தியா தற்போது இருக்கும் சூழலில் இந்த இலக்கை அடைவது கடினம் என்று உலகளா விய பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ‘இது கற்பனை செய்ய முடியாத இலக்கு. 2025-க் குள் 5 டிரில்யன் டாலர் பொருளா தாரத்தை அடைய வேண்டுமென் றால் இந்தியா ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும்’ என்று இந்திரா காந்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியரான ஆர்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் சரிந் துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த அளவில் நடப்பு நிதி ஆண் டில் வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என்று மத்திய புள்ளிவிவர அலு வலகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும்.
தற்போது இந்தியாவின் ஏற்று மதியும் கணிசமாகச் சரிந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2010-ம் ஆண்டு முதலே சரிவைக் கண்டு வருகிறது. தற்போதைய சூழ லில் ஏற்றுமதி அதிகரிப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை’ என்றார்.
மோடி அரசு நாட்டின் பொருளா தார வளர்ச்சியில் கவனம் செலுத்து வதற்குப் பதிலாக, மத ரீதியிலான அரசியலில் கவனம் செலுத்தி வருவதாகவும், இதனால் இந்தியா வில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அச்சம் கொள் கின்றன என்றும் பிரெஞ்சு பொருளா தார நிபுணர் கை சோர்மன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மக்களின் நுகர்வுத் திறன் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக தொழில் நிறுவனங்களின் உற்பத்தி யும் சரிந்துள்ளது. இந்நிலையில் மக்களின் நுகர்வுத் திறனை அதி கரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவரு கின்றனர்.