

வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியது தொடர்பான வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர் வாக அதிகாரியும், நிர்வாக இயக்கு நருமான சந்தா கொச்சாரின் ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மும்பையில் உள்ள சந்தா கொச்சாருக்கு சொந்தமான வீடு, அவருடைய சில முதலீடுகள், பங்கு கள், அவரது கணவர் தீபக் கொச் சாரின் சில சொத்துகள் என மொத்த மாக ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்த சந்தா கொச்சார் மீது சுய ஆதாயத்துக்காக வீடியோ கான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட் டது. அதைத் தொடர்ந்து அவர் மீதும் அவர் கணவர் தீபக் கொச் சார் மீதும் கடந்த ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. தவிர, இந்த மோசடியில் பங்கு வகித்த தாக வீடியோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அவ்வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது அமலாக்கத் துறை சந்தா கொச்சார் மற்றும் அவர் கணவர் தொடர்புடைய ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. அச்சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.600 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தா கொச்சார் 2009-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. சந்தா கொச் சார் தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி முறைகேடாக வீடியோ கான் நிறுவனத்துக்கு கடன் வழங்கி யதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது.
வீடியோகான் குழுமத்தின் நிர் வாக இயக்குநர் வேணுகோபால் தூத், சந்தா கொச்சார் கணவர் தீபக் கொச்சார் நடத்தி வந்த நியுபவர் ரினிவபிள் நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவர். இந்நிலையில் கணவருக்கு ஆதாயம் கிடைக்கும் நோக்கில் வீடியோகான் நிறுவனத் துக்கு தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி சந்தா கொச்சார் முறை கேடாக கடன் வழங்கியதாக வங்கி யின் பங்குதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2018-ம் அக்டோபர் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2018-ம் அக்டோபர் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.