

மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.05 டிரில்லியன் அளவில் பங்கு விலக்கல் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், இலக்கில் பாதியை எட்டுவதே தற்போது சிரமமாக மாறியுள்ளது.
மத்திய அரசு நிதிப் பற்றாக் குறையை எதிர்கொள்ளும் வகை யில் நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட் டில் ரூ.1.05 டிரில்லியன் அளவில் பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் ரூ.17,364 கோடி அள விலேயே பங்குவிலக்கல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த அளவில் 17 சதவீதம் மட்டும்தான். இந்நிலை யில் நடப்பு நிதி ஆண்டு முடிய இன் னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அரசு அதன் பங்கு விலக்கல் இலக்கில் பாதியை எட்டு வதே சிரமம் என்று கூறப்படுகிறது.
பங்கு விற்பனை தொடர்பான நடைமுறைச் சிக்கல்களால் பங்கு விலக்கல் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்கு களை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கடும் இழப்பை சந்தித்துள்ள ஏர் இந்தி யாவை வாங்க தனியார் நிறுவனங் கள் பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை. அதேபோல், பாரத் பெட் ரோலியம் நிறுவனத்தின் 53.29 சதவீதப் பங்குகளையும், கான்கர் நிறுவனத்தின் 30.8 சதவீதப் பங்கு களையும் விற்க ஒப்புதல் அளித்துள் ளது.
ஆனால் இதுதொடர்பான பரி வர்த்தனை முழுமை அடைய கால தாமதமாகும் என்று கூறப்படு கிறது. எனினும், வரும் மார்ச் 31-க் குள் மத்திய அரசு அதிகபட்ச மாக ரூ.50,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரையிலேயே பங்குவிலக்கலை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக நிதிப் பற்றாக்குறை விகிதம் கடுமையான அளவில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது.
ஆனால், வரிவருவாய் கணி சமான அளவில் குறைந்துள்ள நிலையில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 3.8 சதவீத்துக்கு மேல் உய ரும் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை எதிர் கொள்ளும் நோக்கில் நிறுவனங் களுக்கான நிறுவன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது.
இதனால் அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி அளவில் வரி இழப்பு ஏற் பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிவருவாயும் தற்போது குறைந்துள்ளது. தவிர, பங்கு விலக்கல் மூலமும் எதிர்பார்த்த அளவில் நிதி திரட்ட முடியாத நிலை யில், மத்திய அரசு கடும் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண் டுள்ளது. இதன் விளைவாக, அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கான செல வீனங்களை ரூ.2 லட்சம் கோடி அள வில் குறைக்க இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.