

மத்திய பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் பாஜக நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தினார்.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொழில்துறையினர், வர்த்தகர்கள், தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.
இந்த முறை பட்ஜெட் தொடர்பான பணிகளை மேற்பார்வையிடாமல் பிரதமர் மோடியை நேரடியாக களத்தில் இறங்கி பணிகளைக் கவனித்து வருகிறார். நிதி ஆயோக்கில் பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக ஆலோசனையில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்தநிலையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்பு, அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பாஜக நிர்வாகிகள், நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தனர்.