

ஆக்ஸிஸ் வங்கி, விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக வங்கியின் அன்றாட செயல்பாடுகளில் செயற்கை தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. இது தொடர்பாக, நிர்வாக ரீதியாக ஏற்பட்ட அழுத்தத்தினால் 15,000 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடப்பு காலாண்டில் புதிதாக 4,000 பேர்களை பணியில் அமர்த்த உள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி, ஜிபிஎஸ்’22 என்றழைக்கப்படும் வளர்ச்சி, லாபம், நிலைத்தன்மை என்பதை இலக்காகக் கொண்டு வங்கியின் செயல்முறையில் மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 28,000 பேர்கள் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 30,000 பேர் களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களில் பரிச்சயம் இருப்பவர்களையே பணிக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.