

பங்குச் சந்தையில் பார்டிசிபேட்டரி நோட்ஸ் எனப்படும் பங்கு பரிவர்த்தனை முறைக்கு தடை விதிக்கும் உத்தேசம் ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய வருவாய்த்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கருப்புப் பணத்தை ஒழிப் பதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கையை உடனடியாக எடுக்க முடியாது என்று அவர் கூறினார். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி வருவதாக அவர் கூறினார். டெல்லியில் அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தி்ல் நேற்று பங்கேற்றுப் பேசிய அவர், எஸ்ஐடி-யின் பரிந்துரைகள் கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஒரு நாள் இரவில் பி-நோட்ஸ் பரிவர்த்தனைக்கு தடை விதிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய உத்தேசமும் அரசுக்குக் கிடையாது. அதே சமயம் பி-நோட்ஸ் பரிவர்த் தனைக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடுமையாக் குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இது குறித்து அரசு முடிவு எடுக்கும் முன்பு அந்நிய முதலீட்டா ளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இத்தகைய முதலீடுகளை மேற்கொள்வோருடன் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்று அவர் கூறினார். பி-நோட்ஸ் பரிவர்த்தனை மேற் கொள்வோர் குறித்து வாடிக்கை யாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) படிவ விதிமுறைகளில் மேலும் சில மாறுதல்கள் தேவைப்பட்டால் மேற்கொள்வது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார்.