

நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வரு வாய் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களை குறைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் ரூ.2 லட்சம் கோடி அளவில் செலவினத் திட்டங் களை ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட்டில், வளர்ச்சி திட்டங்களுக்கான செல வினங்களாக ரூ.27.86 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி யது. ஏப்ரல் முதல் நவம்பர் வரை யிலான காலக்கட்டத்திலே இந்த மொத்த ஒதுக்கீட்டில் 65 சதவீதம் செலவிடப்பட்டு விட்டது. தவிர வும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட வரி வருவாய் குறைந் துள்ளது. விளைவாக மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் இச்சூழலை எதிர்கொள்ளும் வகையில் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடியை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகிட்டத்தட்ட மொத்த ஒதுக் கீட்டில் 7 சதவீதம் ஆகும். அவ் வாறு மத்திய அரசு செலவினங் களை குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் முதலீடுகள் மேலும் பாதிக்கப்படும். இதன் விளைவாக வளர்ச்சி விகிதம் குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா தற்சமயம் மிகக் கடுமையான பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு வரு கிறது. நுகர்வுத் திறன் மிக மோச மான அளவில் சரிந்துள்ளது. விளைவாக முதலீடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள் ளும் வகையில் மத்திய அரசு சில பொருளாதார மீட்பு நட வடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீத அளவில் குறைக்கப்பட்டது. அதேபோல், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை முடுக்கிவிடும் வகை யில் பாதியில் கைவிடப்பட்ட வீட்டு வசதித் திட்டங்களை தொடரச் செய்வதற்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட் டன. இதுதவிர, ரிசர்வ் வங்கியும் ரெப்போ விகிதத்தை கடந்த ஆண் டில் மட்டும் 135 அடிப்படைபுள்ளி கள் வரை குறைத்தது. இருந்த போதிலும், அரசு எதிர்பார்த்த அளவில் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வில்லை. மக்களிடம் நுகர்வு திறன் குறைத்து இருப்பதே தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான அடிப்படைப் பிரச்சினை. அதை சரி செய்யாமல் பொருளாதாரத்தை மீட்க முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
நிறுவனங்களுக்கான நிறுவன வரி குறைக்கப்பட்டதால், அரசுக்கு வரி வருவாயில் ரூ.1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.24.6 லட்சம் கோடியை மொத்த வரி வருவாயாக ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்து இருந் தது. இதில் ஜிஎஸ்டி இழப்பீடு போன்றவை தவிர்த்து, மத்திய அரசுக்கு ரூ.16.5 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய நிலையில் வரி வருவாயில் ரூ.2.5 லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு 2019-20-ம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அளவை 3.3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தது. தற்போது வரி வரு வாய் குறைந்துள்ளதால் நிதிப் பற்றாக்குறை அளவு அரசு நிர்ண யித்ததைவிட அதிகரித்துள்ளது.
எனவே நிதிப் பற்றக்குறை இலக்கை 3.8 சதவீதமாக உயர்த் தும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அவ்வாறு உயர்த்தப்படும் பட்சத்தில், மத்திய அரசு ரூ.3,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை கூடுதலாக கடன் வாங்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி அதன் ரூ.1.75 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.