

ஜியோனி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். மார்ச் 2013லிருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.
ஜியோனி இந்தியாவில் கூட்டு வைத்துள்ள ஷைன்டெக் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
வைன் டெலிகாம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர்.
விற்பனை மற்றும் விநியோகக் கட்டமைப்பு துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
ஜியோனி மொபைலை இந்தியாவில் சந்தைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
சில்லரை வர்த்தகம், பிராண்ட் உருவாக்கம், விற்பனைக்கு பிறகான சேவை சார்ந்த துறைகளில் வல்லுனர். இந்த துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
வோடபோன் இந்தியா, ஹெச்சிஎல், சாம்சங், சலோரா இண்டர்நேஷனல் போன்ற நிறுவனங்களில் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள்தான் பிராண்ட் உருவாக்கம் செய்கிறார்கள் என்பது இவரது கருத்து.
புணே ஐஎம்டிஆர் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.