

மும்பை
எஸ்பிஐ தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) கொண்டிருக்கும் பங்குகளில் 1 சதவீதத்தை விற்க முடிவுசெய்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையில் எஸ்பிஐ 5.19 சதவீத பங்குகளைக் கொண்டிருக் கிறது. இந்நிலையில் நிதி திரட்டும் நோக்கில் அதன் 1 சதவீத பங்கு களை விற்க திட்டமிட்டுள்ளது.
ஏல முறையில் 50 லட்சம் பங்கு கள் விற்கப்படும் என்று கூறிய எஸ்பிஐ, விண்ணப்பத்துக்கான கடைசி நாள் ஜனவரி 15 என்று தெரிவித்துள்ளது. என்எஸ்இ-யில் கொண்டிருந்த பங்குகளில் 5 சத வீதத்தை கடந்த 2016-ம் ஆண்டு எஸ்பிஐ விற்ற நிலையில், அதன் பங்கு அளவு 5.19 சதவீதமாக குறைந்தது. இந்நிலையில் தற் போது அதில் மேலும் 1.01 சத வீதத்தை விற்க முடிவு செய்துள்ளது.
இதுதவிர அதன் அங்கமான யுடிஐ பரஸ்பர நிதி மற்றும் எஸ்பிஐ கார்ட்ஸ் அண்ட் பேமென்ட் சர்வீஸ் நிறுவனங்களில் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் எஸ்பிஐ-யின் பங்கு மதிப்பு 1.56% சரிந்து ரூ.334-க்கு வர்த்தகமானது.