மின் உற்பத்தி தொடர்ச்சியாக 4 மாதங்கள் சரிவு, பொருளாதாரத்தின் நிலையை பிரதிபலிக்கிறது: தலைப் பொருளாதார அதிகாரி டி.கே.பந்த்

மின் உற்பத்தி தொடர்ச்சியாக 4 மாதங்கள் சரிவு, பொருளாதாரத்தின் நிலையை பிரதிபலிக்கிறது: தலைப் பொருளாதார அதிகாரி டி.கே.பந்த்
Updated on
1 min read

2019 நவம்பர் மாதம் இந்திய தொழிற்துறை உற்பத்தியில் 40% பங்களிப்பு செய்யும் 8 முக்கிய தொழிற்துறைகளின் உற்பத்தி 1.5% குறைந்தது. இதே மாதம் கடந்த ஆண்டில் இந்தத் துறைகளின் வளர்ச்சி 3.3% ஆக இருந்தது.

4 மாதங்களாக தொடர்ச்சியாக முக்கிய தொழிற்துறை சரிவடைந்துள்ளது. ஆனால் அக்டோபரை விட நவம்பர் பரவாயில்லை என்கின்றனர். மின்சாரம், நிலக்கரி, ஸ்டீல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணை உற்பத்தி சரிவடைந்துள்ளன, மாறாக சிமெண்ட், உரம் மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி சற்றே வளர்ச்சி கண்டுள்ளது.

அதிக சரிவாக கச்சா எண்ணெய் உற்பத்தி 5..8% சரிய, உர உற்பத்தி 13.6% அதிகரித்துள்ளது.

நாட்டின் தலைமைப் பொருளாதார அதிகாரி டி.கே.பந்த் கூறும்போது, “கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக மின் உற்பத்தி சரிவடைந்திருப்பதுதான் ஆக ஏமாற்றமான ஒரு விஷயமாக உள்ளது. இந்த நிலை நாடு தற்போது இருக்கும் பொருளாதார நிலைமையின் பிரதிபலிப்பே" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in