Published : 29 Dec 2019 09:17 AM
Last Updated : 29 Dec 2019 09:17 AM

பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை சீரடைகிறது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லியில் பொதுத் துறை வங்கியின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி

பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை சீரடைந்து வருகிறது. நடப்புநிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 13 வங்கிகள் லாபம் ஈட்டியுள் ளன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நேற்று டெல்லியில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த சிலஆண்டுகளாக வாராக் கடன் பிரச்சினையில் சிக்கி உழன்று வந்தபொதுத் துறை வங்கிகள் அதில்இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளன.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 13 பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அரசு மேற்கொண்ட சீர்திருத்தநடவடிக்கைகள் வங்கிகளிடம் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் வங்கிகள் பழையபடி ஸ்திரமான நிதி நிலைக்கு திரும்பி வருகின்றன என்றார்.

கடந்த நிதி ஆண்டில் (2018) மார்ச் வரையான காலத்தில் வங்கிகளின் வாராக் கடன் ரூ.8.96 லட்சம் கோடியாகும். இது நடப்பாண்டில் செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.7.27 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது என்றார்.

அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக வங்கிகளின் வாராக் கடன் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

எஸ்ஸார் ஸ்டீல் தீர்வு முடிவால் வங்கிகள் ரூ.38,896 கோடியை திரும்பப் பெற்றுள்ளன. இது தவிர கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4.53 லட்சம் கோடி தொகையை வங்கிகள் மீட்டுள்ளன என்றார். வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் ரூ.2.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஊழல் வழக்கை துரிதப்படுத்துங்கள்

வங்கி அதிகாரிகள் மீதான நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை விரைவுபடுத்துமாறு பொதுத் துறை வங்கி தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் தனது பட்ஜெட் உரையில் ரூ.50 கோடி வரையிலான ஆண்டு வர்த்தகம் உள்ள நிறுவனங்களுக்கு எம்டிஆர் விதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்திருந்தார். இந்த செலவை ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களது நிதி ஆதாரத்திலிருந்து ஏற்கும் என தெரிவிக்கப்பட்டது.

வங்கி அதிகாரிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்துவதன் மூலம் தவறுசெய்பவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவாகும். அத்துடன் இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பாடமாக அமையும். எனவே நிலுவை வழக்குகளை துரிதப்படுத் துமாறு குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x