Last Updated : 28 Dec, 2019 09:33 AM

 

Published : 28 Dec 2019 09:33 AM
Last Updated : 28 Dec 2019 09:33 AM

நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் வங்கி மோசடி ரூ 1.13 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அதிர்சித் தகவல்

நடப்பு நிதியாண்டில் (2019-20) முதல் பாதியில் வங்கி மோசடியின் அளவு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏறக்குறைய 4 ஆயிரத்து 412 மோசடி சம்பவங்களில் மட்டும் ரூ.ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 6 ஆயிரத்து 801 மோசடிகள் மூலம் ரூ.71 ஆயிரத்து 543 கோடி மோசடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நிதியாண்டின் முதல்பாதியிலேயே மோசடியின் அளவு ரூ.ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது.

ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த நிதியாண்டில் நடந்த வங்கி மோசடிகள் குறித்தும், நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் நடந்த வங்கி மோசடி குறித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.

2019-20-ம் ஆண்டில் 398 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இதில் அனைத்துமே ரூ.50 கோடிக்கு மேற்பட்டவை, இதன் மதிப்பு ரூ.1.05 லட்சம் கோடியாகும்.

ரூ. ஆயிரம் கோடிக்கு அதிகமான மதிப்பில் 21 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.44 ஆயிரத்து 951 கோடியாகும்.கடன் வழங்குவதால் ஏற்படும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த நிதியாண்டில் 90 சதவீத வங்கி மோசடிகளும் நடப்பு நிதியாண்டில் 97 சதவீத மோசடிகளும், கடன் மோசடியால் ஏற்பட்டவையாகும்.

கடன் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது, அதை முறையாகப் பின்பற்றாதது, கடன் திரும்பப் பெறும் முறையை உறுதியாகப் பின்பற்றாதது போன்றவைதான் வங்கி மோசடிகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x