Published : 26 Dec 2019 07:22 PM
Last Updated : 26 Dec 2019 07:22 PM

‘‘இனிமேலும் கடனில் டிக்கெட் கிடையாது’’ - அரசு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா திட்டவட்டம்

புதுடெல்லி

அரசு நிறுவனங்களுக்கு தொகை செலுத்தாமல் கடனுக்கு பயணச் சீட்டுகள் இனிமேல் வழங்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் கைவிரித்துள்ளது.

நாட்டின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்திய கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்த நிறுவத்திற்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது.

இருப்பினும் விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. மொத்தம் 4,500 கோடி ரூபாய் தொகையை செலுத்தவில்லை. அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து அரசு தலையிட்டு நிலைமையை சரி செய்தது.

இந்தநிலையில் அரசுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்வதற்காக புக்கிங் செய்த டிக்கெட்டுக்கான தொகையை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. இதுவும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெரும் சுமையாக உள்ளது.

இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் ‘‘பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்வதற்காக ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் வழங்கியுள்ளது. இதற்கான தொகையை இன்னமும் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. 268 கோடி ரூபாய் கடன் பாக்கியுள்ளது. இந்த தொகை அரசு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இனிமேலும் கடனுக்கு டிக்கெட் வழங்க முடியாது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x