Last Updated : 24 Dec, 2019 08:54 AM

 

Published : 24 Dec 2019 08:54 AM
Last Updated : 24 Dec 2019 08:54 AM

இந்தியா குறிப்பிடத்தகுந்த பொருளாதாரத் தேக்க நிலையில் உள்ளது -  பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) தகவல்

இந்தியா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தேக்க நிலைகளுக்கு இடையில் இருப்பதாக ஐ.எம்.எஃப். அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது, சமீப ஆண்டுகளின் வளர்ச்சியும் கூட அதற்குத் தகுந்த முறைசார் தொழில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை, உழைப்புச் சந்தை பங்கேற்பும் பெரிய அளவில் சரிவு கண்டுள்ளது என்று அதே அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று வாஷிங்டனில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டிருந்தாலும், “சமீபத்திய தொழிலாளர் சந்தை தரவுகளின் படி வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது மற்றும் உழைப்புச் சந்தை பங்கேற்பு என்பது கடுமையாக சரிந்துள்ளது குறிப்பாக பெண்கள் வேலையின்மை அதிகரித்துள்ளது.

நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின்மையினால் இந்தியாவின் இளம் உழைப்புச் சக்திகள் வீணடிக்கப்படும் அபாயம் நிலவுகிறது” என்று ஐ.எம்.எஃப் அறிக்கை எச்சரிக்கிறது.

அரசுக் கட்டுப்பாடுகளில் எந்த ஒரு நிச்சயமும் இல்லாததால் முதலீடும், நுகர்வுச் சக்தியும் சரிந்துள்ளது, என்கிறது இந்த அறிக்கை.

ஐ.எம்.எஃப். இந்தியத் தலைவர் ரணில் சல்காடோ செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, "வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் விரிவாக்கச் சரிவு, பரந்து பட்ட அளவில் கடன் அளிப்பதில் இருக்கும் இறுக்கம், மற்றும் உள்ளார்ந்த சீர்த்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றான தேசமுழுதுமான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் பொருளாதார தேக்க நிலைக்கு பங்களிப்பு செய்துள்ளன.

ஒரு குறிப்பிடத்தகுந்த பொருளாதார தேக்க நிலைகளில் இந்தியா சிக்கியுள்ளது, இதனால் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம், அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை ஐஎம்எஃப் குறைத்து கணிக்க வேண்டிய நிலையில் உள்ளது” என்றார்.

மேலும் வளர்ச்சி எந்திரத்தை மேலும் வலுவூட்ட வேண்டுமெனில் 'பொருளாதாரத்தில் நம்பிக்கை ஊட்டுவதற்கான வழிமுறைகள்’ வேண்டும் என்று கூறிய சல்காடோ.

கார்ப்பரேட் வரிக்குறைப்பினால் வரிவருவாய் பின்னடைவு, அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்களில் தாமதம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி நோக்கை சரிவை நோக்கி இட்டுச் செல்கிறது , குறிப்பிட்ட இலக்கை நோக்கிய வளர்ச்சியை எட்டும் வரையிலும் இந்தியா தன் நிதிக்கொள்கையில் இறுக்கம் தளர்த்த வேண்டும் என்று ஐ.எம்.எஃப் அறிக்கை கூறிய அதே வேளையில் சமீபத்திய கார்ப்பரேட் வரிக்குறைப்பை எதிர்மறையாகப் பார்க்கிறது ஐ.எம்.எஃப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x